Simply In
Do not Miss
வே புரோட்டீன்
வே ஒரு துணை உணவு என்றே கூற வேண்டும். தசைகளில் புரதத் தொகுப்பை மேம்படுத்துவதற்கும், மெலிந்த தசையை வலுவாக்குவதற்கும் மக்கள் இந்த வே புரோட்டீனை பயன்படுத்துகின்றனர். பாலானது கேசின் மற்றும் வே ஆகிய இரண்டு புரதங்கள் அடங்கியது. வே புரதமானது, கேசினிலிருந்து பிரிக்கலாம் அல்லது சீஸ் தயாரிப்பின் போது பெறலாம். அத்தகைய வே புரதத்தில் 9 அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளதால் அதனை முழுமையான புரதச்சத்து என்றே கூற வேண்டும். மேலும், அதில் குறைந்த அளவிலான லாக்டோஸ் மட்டுமே இருக்கும். வே புரதத்தை உட்கொள்வதன் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் பல உள்ளன. மேலும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து அதன் புதிய சிகிச்சை பண்புகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.
வே புரோட்டீன் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளைப் பற்றி தற்போது காண்போம். வே புரோட்டீன் சாப்பிடுபவர்களுக்கு இது நிச்சயம் உதவக்கூடிய ஒன்றாக இருக்கும்…
வே புரோட்டீன் நன்மைகள்
உடல் எடை குறைக்க உதவும்
158 பேர் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவை நியூட்ரீசன் & மெட்டபாலிசம் வெளியிட்டது, அதில் பிற பதப்படுத்தப்பட்ட பானங்களை உட்கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், வே வழங்கப்பட்டவர்கள் “கணிசமாக அதிக அளவிலான உடல் கொழுப்பை இழந்ததோடு, மெலிந்த தசையை வலுவடைய செய்ததும்” கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் – “d protein powder benefits in tamil”
புற்றுநோய் சிகிச்சையில் வே புரோட்டீன் செறிவு பயன்படுத்துவதற்கான நம்பிக்கைக்குரிய முடிவுகளை ஆன்டிகேன்சர் ரிசர்ச் இதழ் வெளியிட்டுள்ளன. இருப்பினும், இது குறித்த ஆராய்ச்சி மேலும் தேவைப்படுகிறது.
கொழுப்பைக் குறைத்தல்
தி பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவில், அதிக எடை கொண்ட 70 ஆண்களுக்கும் பெண்களுக்கும் 12 வாரங்களுக்கு வே சப்ளிமெண்ட்ஸ் கொடுக்கப்பட்டு, அவர்களின் லிப்பிட் மற்றும் இன்சுலின் அளவுகளை பரிசோதித்தது. கேசீன் புரதத்துடன் ஒப்பிடும் போது வே புரோட்டீன் குழுவில் 12 வது வாரத்தில் மொத்த கொழுப்பு மற்றும் எல்.டி.எல் கொழுப்பில் கணிசமான குறைவு ஏற்படுவது கண்டறிப்பட்டுள்ளது.
ஆஸ்துமா
ஆஸ்துமா உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வே புரதம் மேம்படுத்தும். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட 11 குழந்தைகளை உள்ளடக்கிய ஒரு சிறிய ஆய்வின் முடிவில், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 10 கிராம் வீதம் தினமும் இரண்டு முறை வே புரோட்டீன் கொடுக்கப்பட்டதன் விளைவாக, நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவது கண்டறியப்பட்டது.
“d protein powder benefits in tamil”