துத்தநாகம்
செல்களின் வளர்ச்சி, இனப்பெருக்க உற்பத்தி (ஆண் மலட்டுதன்மை நீக்குவதில்) சரும பாதுகாப்பு, வெட்டுகாயங்களை நீக்குவது, உறுப்புகளின் வேலை, சுவையை உணரும் திறன், முடிகளின் வளர்ச்சி என்று இதன் பங்கு அளப்பரியாதது. நமது உணவின் மூலம் பெறும் புரதம், வைட்டமின் போன்ற சத்துகளை உடல் கிரகித்துகொள்ள என்சைம்கள் பணியாற்றுகின்றன. தற்போது நமக்கு தேவை தொற்று நோயை எதிர்த்து போராடக்கூடிய துத்தநாக சத்துகள் தான்.
பால், தயிர்
கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் அல்லது தயிர் தினமும் ஒரு கப் எடுத்துகொண்டால் உடலுக்கு அத்தியாவசிய சத்துகளோடு துத்தநாக சத்தும் பெற்றுவிடலாம். தினமும் காலை அல்லது பகல் நேரத்தில் ஒரு கப் தயிர் சாப்பிடுவதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
டார்க் சாக்லெட்
இனிப்புகள் நிறைந்த சாக்லெட்டில் அதிக கலோரிகளும் நிறைந்திருக்கிறது என்பதால் இனிப்பில்லாத டார்க் சாக்லெட்டை தேர்வு செய்து உங்கள் உடலில் துத்தநாக சத்தை அதிகரிக்க கூடும். 70 முதல் 85 சதவீதம் வரை இருக்கும் டார்க் சாக்லெட்டில் 3.3 மி.கிராம் அளவு துத்தநாகம் உள்ளது. உடலுக்கு ஊட்டச்சத்து தரும் உணவு பொருள் என்றாலும் இதில் சேர்க்கப்படும் இனிப்பு உடலுக்கு நன்மை பயக்காது.
துவரம் பருப்பு
எலும்புகள், தசைகளின் உருவாக்கத்துக்கு தேவையான சத்தை நிறைவாக அளிக்கிறது துவரம்பருப்பு.உடலில் காயங்கள் ஆறுவதற்கும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் உடலில் எதிர்ப்பு அழற்சி தன்மையும் தருவதற்கு துவரம் பருப்பு உதவுகிறது. ஒரு கப் துவரம்பருப்பில் 3 மிகிராம் அளவு துத்தநாகம் நமக்கு கிடைக்கிறது. உடல் வளர்ச்சிக்கு புரதச்சத்து தேவை. உடலில் செல்கள், திசுக்கள்.
கொட்டைகள்
பைன் நட்ஸ், வேர்க்கடலை போன்றவற்றையும் உங்கள் கொட்டைகள் பட்டியலில் சேர்த்துகொள்ளுங்கள். உடல் எடையையும் குறைத்து இதயம் வரை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் தினமும் காலை டிஃபனுக்கு கொட்டைகளை எடுத்துகொள்ளலாம். அன்றாடம் கிடைக்க வேண்டிய துத்தநாக சத்து பாதியளவு இதில் கிடைத்துவிடும்.
தானியங்கள்
கோதுமைதவிட்டை நீக்காமல் சாப்பிட வேண்டும். அரிசியில் பாலீஷ் செய்யப்படாத சிவப்பு அரிசி, பழுப்பு அரிசியில் 0.6% மி.கி அளவு துத்தநாகம் இருக்கிறது.துத்தநாகம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்திருக்கும் இவற்றால் கூந்தல், எலும்புகள் பற்கள், நகங்கள் வலிமை அடைகின்றன.